தெற்கு டில்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள சூபி துறவி நிஜாமுதீன் ஆலியா மற்றும் காலிப் அகாடமியின் தர்காவுக்கு அருகில் பாங்லேவாலி மசூதி என்று அழைக்கப்படும் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. குறுகிய இரும்பு நுழைவு வாயிலை கொண்ட உயரமான கட்டடமாக உள்ளது. அங்கு மக்கள் ஒன்றுக்கூடும் மத சொற்பொழிவு அறை, ஒரு பெரிய சமையலறை மற்றும் ஷூ ரேக்குகளும் கொண்டதாக உள்ளன.
முதல் மாடியில் ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பெரிய மண்டபம் அமைந்துள்ளது. நேற்றும் (மார்ச் 30) அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்
தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகம்